சூடான செய்திகள் 1

சட்டவிரோத துப்பாக்கியுடன் மூவர் கைது…

(UTV|COLOMBO) சட்டவிரோத துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் ஹொரணை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் கெப் வண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

அதன்போது துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களும் தடை செய்யப்பட்ட கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் இன்று ஹொரண நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு

இன்று 10 மணிநேர நீர் விநியோகத்தடை

சிங்கராஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம்…