உள்நாடு

சட்டவிரோதமான முறையில் முகநூல் விருந்து – 34 பேர் கைது

(UTV | கொழும்பு) –  சட்டவிரோதமான முறையில் முகநூல் விருந்து – 34 பேர் கைது

பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பாணந்துறை வடக்கு பொலிஸார் இன்று (04) அதிகாலை சோதனையிட்டுள்ளனர்.

இதில், சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 09 யுவதிகள் உட்பட 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குழு நடத்திய சோதனையில் கஞ்சா,ஐஸ் மற்றும் மதுபானம் போன்ற பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விருந்தின் போது யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

சந்தேகநபர்கள் குழுவொன்றை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களின் பெற்றோரை அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் கைது!

மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

‘உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்’