சூடான செய்திகள் 1

சட்டவிரோதமான தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)  சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை நாட்டிற்கு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்த நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தங்க மாலைகள், மோதிரங்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமைச்சர் சம்பிக அக்குறணை விஜயம் – நகரை புதிதாக திட்டமிட ஏற்பாடு

கையடக்கத் தொலைபேசிகளை இனங்காணுவதற்கு விசேட உபகரணம்

தனியார் வைத்தியசாலைகளின் 53 வகையான மருத்துவ நடவடிக்கைகளுக்கான விலை நிர்ணயம் அடுத்து வாரம்