வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வள்ளங்களுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்படும்

(UDHAYAM, COLOMBO) – பொட்டம் றோலீன் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் பண்ணைமுறையை தடைசெய்வதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய கடற்றொழில் திருத்த சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சட்டவிரோத பண்ணை முறையை பயன்படுத்தும் மீனவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்கப்படவேண்டிய உடனடி நடவடிக்கையை இந்த பண்ணைமுறையை தடுப்பதற்கான சிபாரிசுகள் இந்த திருத்த சட்டத்தின் மூலமாக சட்டமாக்கப்படவுள்ளது.

இந்த சட்டத்திற்கு அமைவாக இலங்கை கடல் எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்கள் உபகரணங்கள் மற்றும் நபர்களை கைதுசெய்யப்படுவதுடன் இவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணமும் அதிகரிக்கப்படவுள்ளது.

இலங்கை கடல் எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் மீன்பிடி வள்ளங்களுக்கான விதிக்கப்படும் தண்டப்பணம் ஒரு மில்லியன் ரூபாவாகும். இந்த சட்டத்திற்கு அமைவாக இந்த தண்டப்பணம் 100 மில்லியன் ருபாவாக அதிகரிக்கப்படும்.

இதேபோன்று தடைசெய்யப்பட்ட பண்ணை முறையை பயன்படுத்தும் உள்ளுர் மீனவர்களுக்கான தண்டப்பணமான 50 ஆயிரம் ரூபா , 5இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

Related posts

PSC on Easter attacks to convene tomorrow

Indian finds missing father in SL after 21 years through YouTube video

அரசாங்க படைகள் கடுமையான தாக்குதல்