சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பசைகளை ஜீப் வாகனத்தில் ஏற்றிச் சென்ற ஆறு பேர் இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
வத்துகெதர வடுமுல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த ஜீப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.