உள்நாடு

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

(UTVNEWS | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

57 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரமோ அல்லது, வீசாவோ இன்றி காணப்பட்ட குறித்த இந்திய பிரஜை, நிலாவெளி மஸ்ஜின் வீதியில் நேற்று (16) கைது செய்யப்பட்டிருந்தார்.

திருகோணமலை நீதவான்  நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

காதலியை பார்க்க சென்ற குளியாப்பிட்டிய இளைஞன் சடலமாக மீட்பு

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்