வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்து இன்று காலை 5.00 மணியளவில் இலங்கை வந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 159 பெட்டகளில் இருந்த 41,040 சிகரட்டுக்கள் போதை தடுப்பு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மீரிகம மற்றும் வாரியாபொல பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 31 வயதுடையவர்கள் என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு

පාර්ලිමේන්තු මන්ත්‍රී ශාන්ත අබේසේකර මහතාගේ පුතා අත්අඩංගුවට

மட்டக்களப்பில் சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினம்