சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பணியாளர்களுக்கு 6 மாத கால பொதுமன்னிப்பு

(UTV|COLOMBO) ஜோர்தான் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பணியாளர்கள் சொந்த நாடுகளிற்குத் திரும்புவதற்காக பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை 6 மாதங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜோர்தானில் 3,500 இலங்கையர்கள் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக, அந்நாட்டின் தூதுவராலயம் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின்படி, ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் பொது மன்னிப்பு காலத்தினுள் அவற்றை தீர்த்து பணியாளர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ் கொச்சிக்கடை ஆலயம்…

3 பதில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

இலங்கை அதிகாரிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்