சூடான செய்திகள் 1

சடலத்தை நறுமணமூட்ட பயன்படும் போர்மலின் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது (video)

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் போர்மலின் தொடர்பில் தாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் புத்திஹபத்திரண தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இதனை இறக்குமதி செய்வதற்கான அதிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னர் அவ்வாறான நிலை இருக்கவில்லை.இந்த போர்மலின் சடலங்களின் (எம்பாமிற்காக) சடலத்தை நறுமணமூட்டி வைத்திருப்பதற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் ஆனால் உணவுப்பொருட்களை நீண்டகாலம் வைத்திருப்பதற்காகவும் தற்பொழுது பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் கூறினார்.

இதனால் நாட்டில் உள்ள மலர்சாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர் சாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக இந்த போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் சடலங்களை நறுமணமூட்டி பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் போர்மலின் விநியோகிக்கப்படுமாயின் விநியோகிப்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிக பணிகள் தொடர்பில் மூன்று தேசிய கொள்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பால்மாவுக்கான விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாண் விலைக்கான விலைச் சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றுகையில் தேசிய கைத்தொழில் கொள்கை, கல்விக்கொள்கை உலக வர்தகக் கொள்கை ஆகியவற்றில் கடந்த 21 ஆம் திகதி தேசிய கூட்டுறவு கொள்கை வெளியிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றம் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு

ஆத்மீக பணியில் ஈடுபடுபவர்களை வீணாக விமர்சித்து இனவாதிகளுக்கு தீனி போடாதீர்கள்! – ரிஷாத்

ஆறாம் கட்ட கலந்துரையாடல் ஒத்திவைப்பு (UPDATE)