வலதுசாரி கட்சிகளை ஒன்றிணைத்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துள்ளோம்.
சஜித் பிரேமதாச தனித்து செல்ல விரும்பினாலும், ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கொத்மலையில் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தி வேறு, ஐக்கிய தேசிய கட்சி வேறல்ல. எனவே இவ்விரு குழுக்களும் வெவ்வேறாக செயற்படுவது கவலைக்குரியதாகும்.
எனவே தாய் வீட்டுக்கு வந்து கடந்த காலங்களைப் போன்று ஒற்றுமையாக அரசியலில் ஈடுபடுவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
வலதுசாரி கட்சிகளை ஒன்றிணைத்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துள்ளோம்.
எவ்வாறிருப்பினும் தனித்து இந்த பயணத்தை தொடர முடியும் என்று சஜித் பிரேமதாச எண்ணுகின்றார். ஆனால் நாம் இணைந்து பயணிப்பதற்கே விரும்புகின்றோம்.
அதேபோன்று அவரது தரப்பிலும் பெரும்பாலானோர் இவ்விரு கட்சிகளும் இணைய வேண்டும் என்றே விரும்புகின்றனர். உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் பேசி தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.
-எம்.மனோசித்ரா