கிசு கிசுசூடான செய்திகள் 1

சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?; ரணில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

(UTVNEWS|COLOMBO) – மக்கள் கேட்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுத்தால் அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக முடிவாகவே அமையும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சேபனை எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு கட்சிக்குள் இருக்கும் ஒருசிலர் விரும்பவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு

நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு-மக்கள் அவதானம்