உள்நாடுசூடான செய்திகள் 1வகைப்படுத்தப்படாத

சஜித் – அனுர விவாதம் : ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு இரத்து

சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க இடையிலான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான விவாதத்தின் ஒருங்கிணைப்பாளர்களான நளின் பண்டார மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி நாளிதழ்களான டெய்லி மிரர் மற்றும் லங்காதீப ஆகியன அரசியல் விவாதத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விவாதத்திற்கு தயார் என அண்மையில் அறிவித்தார்.

இதனையடுத்து, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான விவாதத்தை ஒருங்கிணைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நியமிக்கப்பட்டார்.

அத்துடன், இந்த விவாதத்தை ஒருங்கிணைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையிலே, நளின் பண்டார மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் பின்னர் சந்திப்பை நடத்தலாம் என நளின் பண்டார நளிந்த ஜயதிஸ்ஸவிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுமார் 2.4Kg ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பொரளையில் தீ : வீடுகள் சில கருகின

அலுவலக நேரம் தொடர்பிலான அறிக்கை இன்று கையளிக்கப்படும்