உள்நாடு

சஜித் அணி சிரேஷ்ட எம்.பி ஒருவர் அரசாங்கதுடன்? மனைவி ஊடாக உறுதிப்படுத்தப்படுகிறது

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிரேஷ்ட எம்.பி ஒருவர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளாரா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (sajith premadasa) தொலைபேசி மூலம் கேட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல தடவைகள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சித் தலைவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி ஊடாக உறுப்பினருடன் தொடர்பு கொண்டு அவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப்போகிறீர்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் தான் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டுச் செல்லவே மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல அரசாங்கங்களில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த மேல் மாகாணத்தின் பிரதிநிதியாக சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

கோட்டாபய தலைமறைவாகவில்லை – பந்துல

“தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்தும் நடத்த வேண்டும்” -ACMC வலியுறுத்து