உள்நாடு

சஜித் அணியில் மதுபானம் விநியோகம் செய்யும் நபர் : பொன்சேகா விமர்சனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும் கட்சியின் தவிசாளருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்க விமர்சனம் முன்வைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்த போது இருந்த கௌரவம், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன் பின்னர் இல்லாமல் போயுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் மாவட்டம் முழுவதிலும் மதுபானம் விநியோகம் செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது கட்சி வீழ்ச்சியடைவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

Related posts

ரிஷாட் பதியுதீனின் மனுக்கள் 15 இல் பரிசீலனைக்கு

வளிமண்டலத் தளம்பல்நிலை நீடிப்பு

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு!