சூடான செய்திகள் 1

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி கண்டியில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரி கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பட்டம் போகம்பர மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஆர்ப்பாட்ட பேரணி கண்டி நகர் ஊடாக பயணித்து மீண்டும் போகம்பர மைதானத்திற்கு வருகை தந்து முடிவடைந்துள்ளது.

இந்த ஆர்ப்பட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

அதிகளவான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டதுடன் அவர்கள் சஜித் பிரேமதாஸ வேண்டும் என கோரி குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் மரணத்திற்கான காரணம் இதுவே