அரசியல்உள்நாடு

சஜித்தை ஆதரிப்பது தமிழரசின் இறுதியான தீர்மானம் – சி.வி.கே. சிவஞானம்

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என எடுத்த தீர்மனம் முறைப்படி எடுக்கப்பட்டதே என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் வெள்ளிக்கிழமை நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக மீண்டும் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவை இல்லை. கூட்டம் நடைபெற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

கட்சியில் அவர் இவர் என பார்த்துக்கொண்டு இருந்தால் கூட்டத்தை நடத்த முடியாது. வந்த உறுப்பினர்கள் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அவர்கள் எடுத்த தீர்மானம் சரி. 

எடுத்த தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்றால் அதனை சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதனை அவர்கள் சொல்லலாம்.

ஆனால் கட்சி தீர்மானம் , உரிய கோரத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவே அந்த தீர்மானம் வலுவான தீர்மானம் என தெரிவித்தார். 

Related posts

சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய SJB யில் இணைந்தார்.

கிழக்கு ஆளுநர் இணைப்பாளர்களை நியமிப்பது சட்டவிரோதம் : தேர்தல் ஆணைக்குழு

சர்வகட்சி அரசுக்கு சுதந்திர கட்சி பச்சைக்கொடி