சூடான செய்திகள் 1

சஜித்திற்கு நல்லவர் நற்சான்றிதழ் வழங்கினார் ஜனாதிபதி

(UTVNEWS|COLOMBO) – சஜித் பிரேமதாச என்பவர் அரசியலில் ஒரு திருடரோ, ஊழல் வாதியோ அல்லவெனவும், இந்த நற்சான்றிதழை தான் அவருக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை-தம்புலாகல-சோரிவில-கொட்டராகல-ஜனஉதா கம்மான திட்ட தொடக்க விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

தேடப்பட்டு வந்த நபர் காத்தான்குடியில் கைது

கொரோனா வைரஸ் – இலங்கையில் 91 பேர் அடையாளம்

பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சஜித் போட்டியிடுவதாக பந்துல தெரிவிப்பு