உள்நாடு

சகல தனியார் நிறுவனங்களை மீள் திறக்க இணக்கம்

(UTV |கொவிட் 19) – நாட்டில் உள்ள சகல தனியார் நிறுவனங்களையும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய திறக்க, கொவிட் -19 வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த செயலணியில் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகும் என அமைச்சர் இதன்போது கூறினார்.

குறிப்பாக சமூக இடைவெளியை பேணும் அதே வேளையில் சேவை மாற்றத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

சேவை காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் (வீட்டில் இருக்கும் காலத்தில்) சம்பளத்தையும் வழங்கவும் செலுத்தவும், அடிப்படை சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபாவை விட அதிகரித்த தொகையை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல் ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றை முறையாக செலுத்தவும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

இந்த ஒப்பந்தங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஜூன் மாத இறுதிக்குள் இந்த குழு மீண்டும் கூடி அப்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்யும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

கொவிட் 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அமுலுக்கு வருகிறது

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம்