வகைப்படுத்தப்படாத

க.பொ.த.சாதாரணயில் தர பரீட்சை அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி..!!

(UTV|COLOMBO)-கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஆறு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றினர்.

5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெற்றன.

இந்த நிலையில்இ நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சகைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஆறு இடங்களில் முதன்மை நிலைகள் பதிவாகி உள்ளன.

தமிழ் மொழிமூலத்தில் யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷகுமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதவேளை, கம்பஹா ரத்னமாலி மகளிர் கல்லூரி மாணவி கசுனி ஹங்சனா செனவிரத்ன மற்றும் சமோதி ரவிசா சுபசிங்க ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னரும்இ தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

Supreme Court issues order preventing trial at Special High Court against Gotabhaya

கிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்