வகைப்படுத்தப்படாத

க.பொ.த உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் பாராட்டு

(UTV|COLOMBO)-வெற்றி தோல்வியை சமமாக கருதி வெற்றிகரமான பிரஜையாக திகழ்ந்து நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அர்பணிப்புடன் செயற்படுவது அனைத்து மாணவர்களின் பொறுப்பாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி ஆகக்கூடிய பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டியுள்ள கல்வியமைச்சர் எதிர்காலத்தில் உயர்தர கல்வி நடவடிக்கைகளை இந்த ஆற்றல் மற்றும் ஆர்வத்தை முன்னெடுத்து திறமை மிக்கவர்களாக விளங்க இன்று முதல் செயற்படவேண்டும் என்று அமைச்சர சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் என்ற ரீதியில் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் தான் அர்பணித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பாடசாலை கல்வி கட்டமைப்பில் பௌதீக மறறும்; மனிதவள அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசலை வேலைத்திட்டத்தின் மூலம் பிரபல பாடசலைகளுக்கு பதிலாக கிராம பாடசலைகளை அபிவிருத்தி செய்ய இருப்பதாக அமைச்சர் சுட்டிகாட்டினார்.

இம்முறை உயர்தர பரீட்சை போன்று கடந்த காலம் இடம்பெற்ற பாடசலை வெட்டுப்புள்ளி பரீட்சையில் ஆகக்கூடிய பெறுபேறுகளை பெற்ற பெரும்பாலானோர் பிரபல பாடசலைகளில் அல்ல என்றும் இவர்கள் வெளியிட பாடசாலைகளை சேர்ந்தவர்கள் என்பதையும் அமைச்சர் கூறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக கல்வி துறையில் சமமான உரிமையை எந்தவித வேறுபாடும் இன்றி மாணவர்களை சென்றடைய வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கு வெற்றியடைந்திருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை உயர்தர பரீட்சையில் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மற்றும் உயர் பெறுபேறுகளை பெற தவறியது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தவளை போல் கட்சியை விட்டு பாய்பவர்களுக்கு எச்சரிக்கை

editor

அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன

சம்பூரில் திமிங்கிலங்கள்