கேளிக்கை

கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று

(UTV | இந்தியா) –  நடிகை கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

இது சம்மந்தமான டிவிட்டர் பதிவில் ‘எனது நண்பர்களுக்கு இதை சொல்லவே பதிவிடுகிறேன். எனக்கு கொவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமையில் இருக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அறிகுறி தெரிந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Related posts

விருதை திருப்பி அளித்த ‘பிக்பொஸ் பாலாஜி’

இரண்டாவது வாரத்தில் ‘தி லெஜண்ட்’ திரைப்படம்

அபிமெக்தியின் ஜோடியாக அக்‌ஷரா