உலகம்

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஹாங்காங் அரசும் ஒப்புதல்

(UTV | ஹாங்காங்) – ஹாங்காங் அரசும் தங்களுடைய அங்கீகரி்க்கப்பட்ட தடுப்பூசிப் பட்டியலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசி உருவாக்கின. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்தது.

இதில் அஸ்ட்ரா ஜென்கா நிறுவனம் தயாரி்த்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பல நாடுகள் அனுமதியளித்தன, உலக சுகாதார அமைப்பும் அனுமதியளி்த்து. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் தாமதித்தது.

இந்நிலையில் கடந்த 3ம் திகதி அவசரகாலப் பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து உலகின் பல்ேவறு நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து வருகின்றன.

இதுவரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா உள்பட 96க்கும் மேற்பட்ட நாடுகள் கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக் மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதிதாக ஹாங்காங்அரசும் கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.

உலக சுகதாார அமைப்பின் அறிவிப்பின்படி, கரோனா வைரஸுக்கு எதிராக 78 சதவீதம் சிறப்பாக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுவதாகவும், முதல் டோஸ் எடுத்துக்கொண்டு 14 நாட்களுக்குமேல் 2-வது வது டோஸ் செலுத்தலாம். இந்தத் தடுப்பூசி குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஏற்றது, எளிதாக சேமித்து வைக்க இயலும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

கடும் பனிப்பொழிவு -14 பேர் உயிரிழப்பு

உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா

ஈரான் செல்லும் அலி சப்ரி!