சூடான செய்திகள் 1

கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – 12 பேர் காயம்

(UTV|COLOMBO)  இன்று அதிகாலை மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

டிரக்டர் ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக வெலிகந்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது!

அதிபருடைய கணவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டம்

இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா