உள்நாடு

கோப் – கோபா குழுக்கள் முதல் முறையாக இன்று கூடுகின்றன

(UTV | கொழும்பு) –   ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் பொது அலுவல்கள் குழு மற்றும் அரசாங்க கணக்குகள் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.

அதன்படி பாராளுமன்ற வளாகத்தில் காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கான தலைவர்களும் இங்கு நியமிக்கப்பட உள்ளனர்.

அந்தக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அறிவித்தார்.

கோப் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு பதிலாக கோப் குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.

Related posts

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

அபராத கட்டணங்கள் செலுத்தும் சலுகை காலம் நீடிப்பு

காஸா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் மே 31 வரை நீடிப்பு