உள்நாடு

கோப் குழு முன் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்!

(UTV | கொழும்பு) –

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இரண்டு விசேட அறிக்கைகள் மற்றும் இதற்கு முன்னர் கோப் குழு விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் ஷரித்த ஹேரத் தலைமையிலான கோப் குழுவிற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதற்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்றைய கலந்துரையாடலுக்கு கணக்காய்வாளர் நாயகம் முன்வைக்கவுள்ள அறிக்கையில், முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்படலாம் என கோப் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அரச ஊழியர்களுக்கு பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம்

சந்திமால் – பியூமி ஆகியோருக்கு பிணை [UPDATE]

அரசுக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்