சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷவின் வாகனம் விபத்து

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் பயணித்த ஜீப் வண்டி இன்று காலை, ஹக்மன – தெனகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ பயணித்த வாகனம் ட்ரெக்டர் வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதுடன் ட்ரெக்டர் வண்டியின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், இந்த விபத்தில், கோத்தாபய ராஜபக்ஷவுக்கோ அல்லது அ​வரது மனைவி அனோமா ராஜபக்ஷவுக்கோ, எவ்வித ஆபத்தும் நேரவில்லையென, ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

ரி – 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் மீட்பு

கண்டி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட மாட்டாது…

நானும் பால் அருந்துகிறேன் ஆனால் எனக்கு அது விஷமாகியதில்லை