உள்நாடு

கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29) எடுக்கப்படவுள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையில் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

அதேநேரம் இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், ஏனைய சிறிய உணவு வகைகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தார்.

Related posts

உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கும் புலைமை பரிசில்!

பாதாள உலகக்குழுவை ஒடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவேன் – அனுர

editor

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குமான வாய்ப்பை வழங்குகிறது – அலி சப்ரி.