உள்நாடு

கோதுமை மாவின் விலை உயர்வு

(UTV | கொழும்பு) – அரசாங்கம் விதித்துள்ள சமூக பாதுகாப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை 13 ரூபாவால் அதிகரித்துள்ளன.

இதனால் எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று அறிவித்தார்.

இதேவேளை, கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி

வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்