சூடான செய்திகள் 1

கோட்டை – பொலன்னறுவைக்கு இடையில் புதிய நகர ரயில் சேவை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு-கோட்டை மற்றும் பொலன்னறுவைக்கு இடையில் இம் மாதத்தின் நடுப்பகுதியில் புதிய நகர ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருதானையிலிருந்து பெலியத்த வரையிலான புதிய ரயில் சேவை, இம்மாத நடுப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் வெடிப்புச் சம்பவம்

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

காசல்ரி நீர்தேக்கப்பகுதியில் தீ வைப்பு!