சூடான செய்திகள் 1

கோட்டா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம் நாடு தேடும் டீம் லீடர் யார்? விளக்குகிறார் மனோ

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி பெயரிடும் வேட்பாளரை நாம், ஜனநாயக தேசிய முன்னணி தலைமை குழுவில் அங்கீகரிப்போம். என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற சிங்கள மொழியிலான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடுகிறது, இதுவே எங்கள் முதல் வெற்றி இங்கு இப்போது ரணில், சஜித், கரு ஆகிய மூன்று பெயர்கள் பேசப்படுகின்றன. எவர் வந்தாலும் அவர் வெறும் வேட்பாளர் மட்டுமல்ல. அவர் எங்கள் டீம் லீடர். இங்கே டீம் என்ற தலைமைக்குழு முக்கியமானது. நாம் ரணில் ஆட்சிக்கு, சஜித் ஆட்சிக்கு, கரு ஆட்சிக்கு வித்திடவில்லை. எமக்கு தேவை சட்டத்தின் ஆட்சியே எனவும் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

மேலும் கூறுகையில்,ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம், ஒரு சட்ட விவகாரம். அதை அமெரிக்க அரசும், இலங்கை தேர்தல் ஆணையகமும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் பார்த்துக் கொள்ளட்டும்.

இனி வருங்காலத்தில் ஒருவேளை அவர்கள் வென்றால், பிரதமர் மற்றும் பிரபல அமைச்சர்கள் எல்லோருமே ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்கள் தான். இந்த குடும்பத்துக்கு வெளியே தகுதியானவரை தேடிபார்க்க உங்களால் முடியாது.

எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் ´´யார் அவர், யார் அவர், யார் அவர்´´ என தேடுகிறது. இன்று கோட்டா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். எமது வேட்பாளரை அறிந்துக்கொள்ள நாடு விரும்புகிறது. முழு நாட்டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் 195 ரூபாவால் அதிகரிக்கும் சமையல் எரிவாயு விலை

இதுவரை 2289 பேர் கைது

எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை நிறைவு