உள்நாடு

கோட்டா கோ கிராமத்தின் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுவது குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு

(UTV | கொழும்பு) – ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை காலிமுகத்திட கோட்டாகோகம போராட்ட மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மாணங்களுக்கு எதிராக சட்ட நடைமுறைக்கு புறம்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.

இதன்படி, இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த அனுமதியற்ற நிர்மாணங்களை அகற்றுவது தொடர்பான அடிப்படை சட்ட நடவடிக்கைகளை உரிய காலத்திற்குள் ஆரம்பிப்பதற்கு பிரதிவாதிகளுக்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காலிமுகத்திட கோட்டாகோகம போராட்ட மைதானத்தில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர்த்தோட்டங்களை இன்று மாலை 5.00 மணிக்கு முன்னர் அகற்றுமாறு பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்ததுடன், இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை

தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை – நான் அதை கேட்கவுமில்லை – பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை – சந்திரிகா குமாரதுங்க

editor

பேரூந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மட்டு