உள்நாடு

கோட்டா எங்களை ஏமாற்றினார் – பேராயர் கார்டினல்

நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்தார்.

எனினும், ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

பிலியந்தலை இரசாயன விற்பனை நிலையத்தில் தீ பரவல்

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

சீமெந்து விலை நள்ளிரவு முதல் குறைகிறது