சூடான செய்திகள் 1

கோட்டாவுக்கு எதிரான இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை நாளை(04) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று(03) உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

Related posts

இடியுடன் கூடிய மழை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி நெறிகள்

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு