உள்நாடு

கோட்டாவின் சொகுசு வாகனம், பிரபல நடிகையிடம்..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு வாகனமொன்று பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தற்பொழுது பயன்படுத்தி வருகின்றமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகே ரட்ட (எனது நாடு) அமைப்பின் தலைவர் சஞ்சய மெதவத்த இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். சட்டவிரோத சொத்து குவிப்பு பிரிவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக வாகனமொன்றை தற்பொழுது பியூமி பயன்படுத்தி வருகின்றார் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் தருணத்தில் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதாக சஞ்சய தெரிவித்துள்ளார்.

நிதிச் சலவையில் ஈடுபடுவோர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த அதி சொகுசு வாகனத்தை பியூமி எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மாடல் அழகியான பியூமி அதி சொகுசு வீடொன்றில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பியூமியை பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வாகனத்தின் சந்தைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபா என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெறுமதியான வாகனமொன்றை எவ்வாறு பியூமி கொள்வனவு செய்தார் அவரது வருமான வழி என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வாகனத்தை பியூமி கோட்டாவிற்கு வாங்கி கொடுத்திருக்க வேண்டும் அல்லது கோட்டா பியூமிக்கு வழங்கியிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பியூமி அண்மைக் காலமாக எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பலரை தமக்கு தெரியும் எனவும் அவர்களினால் பியூமி போன்று ஆடம்பர வாழ்க்கை வாழ முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

பியூமி நாளொன்றுக்கு லட்சக் கணக்கான பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பணத்தை வாரி இறைப்பது குறித்து தமது அமைப்பு கண்காணித்து அம்பலப்படுத்தும் என சஞ்சய தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்தப்படாது

“ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்” – 3600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு