உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை
வழங்குவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (03) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அசாத் மௌலானா தொடர்பாகவும் அரசாங்கத்தின் பொய்யான பிரசாரம் குறித்தும் உதய கம்மன்பில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என செனல் 4 தொலைக்காட்சி தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இமாம் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது குறித்த கடந்த ஒக்டோபர் மாதம் நாம் பகிரங்கப்படுத்தியிருந்தோம். அதில் பலவிடயங்களை தெரியப்படுத்தியிருந்தோம்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அரசாங்கத்துக்குள்ளேயே உள்ளதால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியைப் பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா செனல் 4 வுக்கு தெரிவித்திருந்தார். அவரை நாட்டுக்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்துகமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வீடியோ