உள்நாடு

கோட்டாபயவை பிரதமராக்கவோ வேறு எந்தப் பதவிக்கும் நியமிப்பது பற்றியோ கலந்துரையாடவில்லை : ருவான்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியில் சேர்வது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை. மேலும் அவர் அரசியலில் இருப்பதா இல்லையா என்பதை அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை” என ஐதேகவின் 76வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற மத வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் ருவான் விஜேவர்தன கூறினார்.

இதேவேளை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து ராஜபக்சே மீண்டும் இலங்கை வர அனுமதிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த ருவான் விஜேவர்தன, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம் என்றும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

பேருவளை – களுத்துறை கடற்பரப்பிற்கு இடையே சிக்குண்டுள்ள ‘சீன உரம்’

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு என்னிடம் பதில் உள்ளது – நாமல்

editor

கொழும்பு – இராஜகிரியில் தீ விபத்து

editor