சூடான செய்திகள் 1

கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை வைத்தியப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்ல உள்ளதால் அதற்கு அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

Related posts

புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு