உள்நாடு

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – உலக வர்த்தக மையத்தில் ஆடம்பர அலுவலகம் நடத்திக் கொண்டிருந்த போது 226 மில்லியன் ரூபா, 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், த்ரிகோ குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அங்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு அவரை ஒக்டோபர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சந்தேகநபர் தனது அலுவலகத்தை அண்டிய பல வர்த்தகர்களுடன் நட்பைப் பேணி வந்ததாக குற்றம் சுமத்தியுள்ளது.

அதிக சலுகைகள் தருவதாக கூறி வர்த்தகர்களிடம் சந்தேக நபர் பணம் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற வழக்குகளில் சந்தேகநபருக்கு எதிராக மேலும் எட்டு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

சந்தேகநபரின் வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்ய பிரபல அரசியல்வாதியொருவரும் பணம் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் அறிவித்தார்.

Related posts

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

15 ஆம் திகதிக்குள் 732 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த தவறினால் நாடு வங்குராேத்தாகும் – ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை

editor

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்