கேளிக்கை

கோடிகளில் புரளும் விஜய்

(UTV | சென்னை) – பீஸ்ட் படத்தை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தின் சம்பளம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ.120 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்.

 

Related posts

நான் நடிகை, சமூக சேவகி இல்லை

பியார் பிரேமா காதல் பற்றி ஹரீஷ் கல்யாண்

சாப்பிட்டுகிட்டு குரல் கொடுத்த சமந்தா