உள்நாடு

கொவிட் 19 : மீளவும் மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – ஆரம்பத்தில் நாட்டில் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் பரவியபோது நிலைமையை கட்டுப்படுத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்பைப் போலவே மக்களும் புத்திசாலித்தனமான செயற்பட்டது மிகவும் உதவியாக அமைந்தது.

மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் விரைவாக பரவுவதை தடுக்க இச்சந்தர்ப்பத்திலும் பொறுப்புணர்வுடன் செயற்படுவது மிக முக்கியமாகும்.

– உங்களுக்கு காய்ச்சல் இருமல் தடிமன் ஆகிய நோய் அறிகுறிகள் இருப்பின், விரைவாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

– வைத்திய ஆலோசனை பெறச் செல்லும் போது பொது போக்குவரத்து சேவையைப் பெறுவதை இயலுமானளவு தவிருங்கள்.

– போக்குவரத்துகளை தவிர்த்து வீட்டில் தரித்திருங்கள்

– மேலதிக தகவல்களைப் பெற 1999 சுவசெரிய தொலைபேசி சேவையை அழையுங்கள்.

– நாட்டின் எதிர்கால நிலைமை எவ்வாறு அமையப் போகின்றது என்பதைத் தீர்மானிப்பது இன்றைய எமதும் உமதும் பொறுப்புணர்வுடனான செயல்பாட்டிலேயே தங்கியுள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

40 MPக்களுடன் எதிர்க்கட்சியில் அமர போகும் நாமல்!

மின் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு