உலகம்

கொவிட் 19 – மிகக்கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலை

(UTV | ஜெனீவா) – கொவிட்-19 வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் கொவிட்-19 தொற்றுக்கு முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

கொவிட்-19 என்பது இதுவரை தமது அமைப்பால் அறிவிக்கப்பட்ட மிகக்கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தமது அவசர குழுவை கூட்டி கொவிட்-19 தொடர்பில் மறு ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தினால் ஐந்து தடவைகள் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டன.

இரண்டு தடவைகள் எபோலா பரவல்கள், ஜிகா, போலியோ மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய சந்தர்ப்பங்களிலேயே இந்த அவசர நிலைகள் அறிவிக்கப்பட்டன.

எனினும் தற்போதுள்ள நிலை மோசமான ஒன்றாகும். இதுவரையில் 650,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் கொவிட்-19 இன்று உலகத்தை மாற்றிவிட்டது. சமூகங்களையும் நாடுகளையும் ஒன்றிணைந்து பின்னர் தவிர்த்து விட்டது.

கடந்த ஆறு வாரங்களில் மாத்திரம் கொவிட்-19 தொற்றாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ள
இந்நிலையில் கொவிட்-19 வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹஜ் கடமை பற்றி ஓர் அறிமுகம்!

ஐரோப்பிய தலைவர்கள் பலர் சுய தனிமைப்படுத்தலில்

இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி