உள்நாடு

கொவிட் 19 நிதியத்திற்கு 609 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTVNEWS | COLOMBO) -கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 609 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் தலைமை சங்கநாயக்க தேரரும் லொஸ் என்ஜல்ஸ் நகரின் தர்மவிஜய விகாரை மற்றும் பாமங்கட ஸ்ரீ மஹா விகாரையின் விகாராதிபதி சர்வதேச சமய அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் அக்கமகா பண்டித கலாநிதி வல்பொல பியனந்த நாயக்க தேரரின் கோரிக்கையின் பேரில் வியட்நாம் – அமெரிக்க பௌத்த சம்மேளனத்தின் தலைவர் திக் வீன் லீ தேரர் 15000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

Related posts

அரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்

இன்று முதல் நவீன யுக்திகளுடன் சுற்றிவளைப்பு.

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு