உலகம்

கொவிட் – 19 : சீனாவில் மேலும் 150 பேர் பலி

(UTV|சீனா) – கொவிட் – 19 தொற்றினால் சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட் 19 தொற்றால் சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 150 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களுள் ஆறு சுகாதார பணியாளர்களும் அடங்குவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துளளார்.

இதேநேரம், சீனாவுக்கு வெளியே மூன்று நாடுகளில் மூன்று பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் முதலான மூன்று நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் வீதம் உயிரிப்பு பதிவாகியுள்ளது.

Related posts

‘Novavax’ சாத்தியமாகும் அறிகுறி

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராக பெண்ணொருவர் நியமனம்!

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தியமைக்கவேண்டும் – சர்வதேச ஆணைக்குழு.