உலகம்

கொவிட் – 19 : சிகிச்சை முறை எதற்கும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை

(UTV | கொவிட் 19) – கொவிட் – 19 என இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சை முறை எதற்கும் தாம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பின் சுகாதார நெருக்கடிகள் திட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆய்வுக்கூட பரிசோதனையில் (clinical trials) ஏராளமான சிகிச்சை முறைகள் இருப்பதாகவும், இதில் எந்த சிகிச்சை முறைக்கும் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகளுக்காக உலக சுகாதார அமைப்பு காத்திருப்பதாகவும், அதன்பிறகே எந்த சிகிச்சை முறைக்கும் ஒப்புதல் அளிப்பதென முடிவு எடுக்கப்படுமென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

இலங்கை பயணிகளுக்கு இத்தாலி தடை

உக்ரைன் ஜனாதிபதியின் கார் விபத்து