வணிகம்

கொவிட்– 19 காலப்பகுதியில் பால் பதப்படுத்தலில் சிறந்த தடுப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யும் Pelwatte

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, பால் பதப்படுத்தும் போது சிறந்த சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

இந்த நெருக்கடி நிலையின் போதும் தடையின்றி பால் சேகரிப்பைத் தொடரும் இந் நிறுவனம்,  உள்ளூர் பால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்கின்றது. அந்த வகையில், பால் சேகரிப்பின் போது கடுமையான கொவிட்- 19 தடுப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய Pelwatte முகாமைத்துவம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மேலும் நபருக்கு நபர் இடையிலான தொடர்பைக் குறைப்பதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.

“இந்த நெருக்கடியான நிலையில், பாலுற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனம் என்ற வகையில், ​​கொவிட்-19 பரவுவதை தடுக்கவும், திறம்பட நிவர்த்தி செய்யவதற்குமான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிக்கு நாம் ஆதரவளிப்பதை உறுதிப்படுத்த Pelwatte நிறுவனம் முடியுமான சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாலுற்பத்தித் துறையானது கொரோனா நோய்த்தொற்றின் எவ்விதமான அதிகரிப்பையும் மீறி  பாலுற்பத்தியானது முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை உறுதி செய்ய கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும் முக்கிய துறையாகும்,” என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர், அக்மால் விக்ரமநாயக்க தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்த்தொற்றின் பின்னர் Pelwatte Dairy Industries Ltd முன்னெடுத்த தடுப்பு நடவடிக்கைகளானது, Lanka Sugar Company (Pvt) Ltd உடனான விரைவான கூட்டுத் திட்டத்தையும் உள்ளடக்கியிருந்தது. Lanka Sugar Company (Pvt) Ltd நிறுவனமானது Pelwatte அமைந்துள்ள அதே வளாகத்திலேயே அமைந்துள்ளதுடன், ஒரே நுழைவாயிலையே இரு நிறுவனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இரு நிறுவன நிர்வாகங்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஒரு பொதுவான துப்புரவு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த வகையில், சேகரிக்கப்பட்ட பால் கொண்ட பால் பவுசர்கள் நுழைவாயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு, ஊழியர்களால் அவற்றின் வெளிப்புறத்தில் ஐதாக்கப்பட்ட குளோரின் கரைசல் தௌிக்கப்படுவதன் மூலம் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றது. இதனோடு பவுசர் ஓட்டுநர்கள் வெளியே விசேடமாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் கைகளைக் கழுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் ஐதாக்கப்பட்ட ஈதைல் மதுசாரத்தை அடிப்படையாகக் கொண்ட தெளிப்பான் மூலம் தொற்று நீக்கம் செய்யும் விசேட கட்டமைப்பினுள் நுழைகின்றனர். தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்தவுடன், ஊழியர்களுக்கு குளிப்பதற்கு சிறப்பு அலகுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்,  அவர்களின் ஆடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கு பதிலாக நிறுவனத்தால் புதிய ஆடைகள் வழங்கப்படுகின்றன.

நுழைவாயிலின் ஊடாக பால் பவுசர்கள் நுழைந்ததும்,  ஐதாக்கப்பட்ட குளோரின் தெளிப்புடன் கூடிய மேலுமொரு மேம்பட்ட சுத்திகரிப்பு செயன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. பவுசர்களின் மூடிகளும் ஆரம்பத்தில் சுத்தம் செய்யப்படுகின்றன. பாலை இறக்கும் பகுதியில், Pelwatte  இறக்கி வைக்கும் ஊழியர்கள் சூடான நீரைப் பயன்படுத்தி, நீராவி மூலம் பவுசர்களின் மூடியையும், ஏனைய உயர் தூய்மையான பாகங்களையும் சுத்தம் செய்வது கட்டாயமாகும்.

அனைத்து நுழைவு புள்ளிகளையும் சுத்தப்படுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், உள் மற்றும் வெளிப்புறங்களில் வழமையாக குளோரின் தெளிக்கப்படுகின்றன.தொழிலாளர்கள் குளித்து, தமது சீருடையை மாற்றிய பின்னரே உற்பத்தி தளத்தில் நுழையமுடியும்.  அனைத்து ஊழியர்களும் உற்பத்தி செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முன்னதாக, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கொவிட்- 19 தடுப்பு பரிசோதனையான நுழைவாயிலில் வைத்து மேற்கொள்ளப்படும்  உடல் வெப்பநிலை மதிப்பீடு மற்றும் கட்டாய துப்பரவு செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Pelwatte Dairy Industries தொடர்பில்,

Pelwatte Dairy Industries Ltd, நாடு முழுவதும் சிறந்த தரமான பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும். இத்துறையில் முக்கிய சக்தியாக வளர்ந்து வரும் பொருட்டு இந்நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதுடன், வளர்ச்சிக்கான பகுதிகளையும் அடையாளம் கண்டுள்ளது. Pelwatte Dairy Industries Ltd, சர்வதேச தரமான பால் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளதுடன், முதன்மையான Pelwatte வர்த்தக நாமம், எங்கள் வலிமை மற்றும் ஊக்கத்தின் ஆதாரமாக இருக்கும் வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையை பெற்றுள்ளது.

Related posts

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் அபிவிருத்தி

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்

இறால்களின் விலை வீழ்ச்சி…