உலகம்

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்து வரும் சூழலில், தென் கொரியாவில் பலத்த பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி வேண்டும், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, அவர்கள் வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தென் கொரியாவில் பாராளுமன்றத் தேர்தல் ஒருபோதும் தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் 19 : உலகளவில் இதுவரை 228,224 பேர் பலி

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிப்பு

பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழிகாட்டல் – அரவிந்த குமார்