வணிகம்

சிறிய – நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை முன்னேற்ற HNB 5 பில்லியன் ரூபா கடன் முறையை அறிமுகம் செய்கிறது

(UTV|கொழும்பு) – COVID-19 தொற்றுநோயின் பின்னர் சிறிய மற்றும் நடுதத்தர அளவிலான தொழில்முனைவோரை மீண்டும் முன்னேற்றுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியின் விளைவாக HNB 5 பில்லியன் ரூபா நிவாரண நிதியமொன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் குறிப்பிடத்தக்க மூலதன தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நிதியம் பயன்படுத்தப்படுகிறது.

COVID-19 தொற்றுநோய் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் எடுத்த தீர்மானம் மிக்க நடவடிக்கைகளின் பின்னர் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதன்படி முன்னோக்கிச் செல்ல, சுமார் மூன்று மாதங்களாக செயலற்ற நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது எமது அடுத்த பிரதான சவாலாக உள்ளது. இந்த முயற்சியின் போது அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள HNB முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.’ என HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெனதன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சௌபாக்கியா கொவிட்-19 மறுநிதியளிப்பு கடன் யோசனைத் திட்டத்திற்கு சமமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்குத் தேவையான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக HNBஇன் இந்த கொவிட் நிதியை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

எனவே அரசாங்கத்தினால் வருடத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படும் 4% கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு முடியாமல் போன விண்ணப்பதாரிகள் உச்ச அளவில் 24 மாத காலத்திற்காக வருடத்திற்கு 8% நிவாரண வட்டி விகிதத்துடன் HNB நிவாரண நிதியத்தின் ஊடாக வேலையைத் தொடங்குவதற்கு மூலதன கடனை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அதன்படி, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு HNB தமக்கே உரிய உள்ளக நிதியமொன்றினால் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு பிரிவில் எமது முன்னோடி பங்களிப்பு மற்றும் பாரிய சேவை வலைப்பின்னலை கருத்திற் கொண்டு HNB இந்த பிரிவிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமை காலத்திற்கு ஏற்ற விடயமாகும் – இலங்கையில் தொழில்களில் கிட்டதட்ட பாதி தொழில்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த வர்த்தகங்களில் பெரும்பாலானவை நிதி நெருக்கடிகளை எதிகொண்டுள்ள போதிலும் தேவையான சரியான ஒத்துழைப்புடன் அவர்களுக்கு மீண்டும் மேலே எழுந்து நிற்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இது நெருக்கடியான காலப்பகுதியென வங்கியென்ற ரீதியில் எமக்குத் தெரியும். இவ்வாறான நெருக்கடியான காலப்பகுதியை மீண்டும் எதிர்கொள்வதற்காக எமக்கு வசதியாக இருக்கக் கூடிய அனைத்தையும் செய்து இந்த நெருக்கடியான காலத்தை வெற்றிகொள்வதற்காக வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான எல்லா விதங்களிலும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். சௌபாக்கியா கடன் யோசனை திட்டம் சுயாதீனமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த நிவாரண நிதியத்தை அறிமுகம் செய்வதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உதவியாக அமையுமென நாம் நம்புகிறோம்.’ என HNBஇன் வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்தார்.

மேலும், தேசிய முன்னுரிமைகளுடன் தமது நடைமுறைகளை வரிசைபடுத்துவதற்கு வங்கி எதிர்பார்த்துள்ளது. தற்போதைய கொவிட் தொடர்பான கொடுப்பனவு பெக்கேஜ்களுக்கு முன்னர், செயலற்ற பொருளாதார சூழலில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொண்டுள்ள உற்பத்தி, சேவை, விவசாயம் மற்றும் மேலதிக பெறுமதி சேர்க்கக் கூடிய வர்த்தகங்களில் ஈடுபடும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொருளாதார மேம்பாட்டை துரிதப்படுத்துவதற்காக கடன் வசதிகளை அதிகரிப்பதற்கு HNB பாரிய அளவில் இணைந்துள்ளது.

SME துறையில் பிரவேசித்துள்ள முதலாவது தனியார் பிரிவு வர்த்தக வங்கியாக இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பில் HNBக்கு நீண்டகால வரலாறு காணப்படுகிறது. விசேடமாக 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலால் எதிர்மறையான விதத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்காக அவர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை தற்காலிகமாக இடைநிறுத்துதல் மற்றும் தொழில் மூலதன கடன்களை பெற்றுக் கொடுத்தல் போன்றவை கடந்த வருடம் முழுவதும் SME வாடிக்கயாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வங்கி எடுத்த தீர்க்கமான நடவடிக்கையாகும்.

COVID-19 தொற்றுநோய் பரவிய பின்னர் இந்த ஒத்துழைப்பு SME வாடிக்கையாளர்களுக்கு மேலும் பெற்றுக் கொடுக்கப்படும். தனிநபர்கள் மற்றும் தொழில்முனைவோர் 75,000க்கும் அதிகமானவர்களுக்கு கடன் ரத்து வழங்கப்பட்டதற்கு மேலதிகமாக, CSL சௌபாக்கியா ஆரம்ப முதலீட்டு கடன் யோசனைத் திட்டத்தின் கீழ் நிவாரணம் குறித்து விண்ணப்பிப்பதற்கு தொழில்முனைவோர் 2500க்கும் அதிகமானோருக்கு HNB தற்போது வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்தின் பங்காளியாக சேவை செய்து, இயற்கை அனர்த்தங்களில் வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதனை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக SME வாடிக்கையாளர்களுடன் HNB தொடர்ந்தும் உறவுகளை பேணும். இயற்கை அனர்த்தங்களினால் இடையூறுகளுக்கு ஆளாகியுள்ள வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதவி வழங்குவதற்காக கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றி அவ்வாறான சந்தர்ப்பங்களில், கடன்களை மீள் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை நீடித்துக் கொள்வதற்கும், காப்புறுதி தொடர்பான ஒத்துழைப்பு, காலம் தாழ்த்தி கடனை செலுத்துதல் போன்ற அவர்களது சிரமங்கள் குறித்து பேச்சு நடத்த வங்கி தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேயிலைக்கு அடுத்தபடியாக கிராக்கி ஆகும் கோப்பி

ஸ்ரீலங்கா டெலிகொம் அணியை வீழ்த்திய HNB Finance இன் விற்பனை சேவைகள் C பிரிவு அணி

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கொழும்பில் விஷேட வைபவம்…