உள்நாடு

கொவிட் தொற்றாளர்களுக்கு இன்று முதல் புதிய முறைமை

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் நோய் நிலைமைக்கு அமைய சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல் அல்லது வீட்டினுள் வைத்து பராமரிப்பதற்காக இன்று முதல் புதிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மேல் மாகாணத்தினுள் புதிய முறைமை செயற்படுத்தப்படவுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புதிய முறைமையின் கீழ் 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் ஒன்றில் தனது நோய் நிலைமை குறித்து தொற்றாளர் அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறுந்தகவல் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

பிரதமருடன் GMOA இன்று கலந்துரையாடல்

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை – அமெரிக்க தூதுவர்

editor