உள்நாடு

கொழும்பை வந்தடைந்த சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ மருத்துவக் கப்பல்

மஹா சயுரே’ மருத்துவமனை என அழைக்கப்படும் சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ இராணுவ மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

மேலும், ‘பீஸ் ஆர்க்’ என்ற கப்பல், கடற்படையின் இசைக்குழு வரவேற்புக்கு மத்தியில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதும் சிறப்பு. உலகின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட .ராணுவ மருத்துவமனைக் கப்பலாக இதைக் கருதலாம்.

கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் Zhoushan இல் அமைந்துள்ள இராணுவ துறைமுகத்தில் இருந்து ஜூன் 16 அன்று கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியது.

உலகெங்கிலும் உள்ள அவசரகால சூழ்நிலைகளுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும். இந்த கப்பல் சீன மக்கள் குடியரசால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.

இந்த கப்பல் 2008 முதல் மருத்துவ உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

178 மீட்டர் நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பணியாளர்கள் உள்ளனர்.

அவர்களில் 106 பேர் மருத்துவர்கள். கப்பலில் சிறிய படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

கப்பலில் 17 மருத்துவ துறைகள் மற்றும் 5 துணை நோயறிதல் துறைகள் உள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் ஒருவாரம் தங்கியிருக்கும் கப்பல் சிங்கப்பூர் வழியாக சீனா திரும்பும்.

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ஒரு வாரத்தில் இலங்கை மக்களுக்கும், சீன நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட சீன பிரஜைகளுக்கும் இலவச நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்