அரசியல்உள்நாடு

கொழும்பை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு தாருங்கள் – ஐக்கிய குடியரசு முன்னணி பகிரங்க கோரிக்கை

2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுத்த கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவோம்.

கொழும்பில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்றும் வாய்ச்சொல் வீரர்களாக பொய்யுரைக்கிறார்கள்.

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு வழங்குங்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய குடியரசு முன்னணியின் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை (28) மத வழிபாடுகளுடன் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.இதன்போது  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள் சகல மத தலங்களுக்கும் சென்று தமது கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.அனைத்து மத தலங்களுக்கும்  சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டோம்.கொழும்பு நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் முன்னெடுத்த பணிகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தப்பட்டன. குறிப்பாக கொழும்பு நகரின் கழிவகற்றல், திண்மக்கழிவகற்றல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய பிரச்சினைகளுக்கு தீரல்வு கண்டோம்.

கொழும்பு நகரில் வாழ்பவர்களில் 70 சதவீதமானோர் குறைவான வருமானத்தை பெறும் தரப்பினர்களாவார்.இவர்கள் ஏழைகள். இவர்களில் ஒரு பகுதியினருக்கு தொடர்மாடி குடியிறுப்புக்களை வழங்கினோம்.

மிகுதியாகவுள்ளவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.

2015-2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுத்த கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவோம்.கொழும்பினை அழகுப்படுத்துவோம்.கொழும்பில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்றும் வாய்ச்சொல் வீரர்களாக பொய்யுரைக்கிறார்கள்.கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு வழங்குங்கள் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

editor

ரிஷாதின் கைது சட்ட ஆட்சியையும் நீதி முறைமையையும் குழிதோண்டிப்புதைக்கும் செயல்

மேலும் பலருக்கு கொவிட் உறுதி